< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
ஆவணப்படுத்தும் பணிகள் தீவிரம்
|14 Oct 2023 1:21 AM IST
அகழாய்வில் கிடைத்த பொருட்கள் ஆவணப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 2-வது கட்ட அகழாய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 18 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதில் பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட மண்பாண்ட பொருட்கள், யானை தந்ததால் செய்யப்பட்ட பகடை காய்கள் உள்பட 4,525 பொருட்கள் கிடைத்துள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன்பாஸ்கர் தெரிவித்தார். வருகிற 24-ந் தேதியுடன் 2-வது கட்ட அகழாய்வு பணிகள் முடிவடைய இருப்பதால் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை சுத்தம் செய்யும் பணிகள், கிடைத்த எலும்புகளை தரம் பிரிக்கும் பணிகள், ஆவணப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.