< Back
மாநில செய்திகள்
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில்  டாக்டர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கடலூர்
மாநில செய்திகள்

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
8 Aug 2022 9:50 PM IST

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களின் பணி நேரத்தை நீட்டித்து வெளியிட்டுள்ள அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில துணை தலைவர் புலிகேசி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சசிகுமார், செயலாளர் குலோத்துங்கசோழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர்கள் சிவக்குமார், பாலச்சந்தர், அமுதா, வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். இதில் டாக்டர்கள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர். முடிவில் டாக்டர் அருண்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்