< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
செந்தில் பாலாஜியிடம் இரவு விசாரணை நடத்த வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுரை
|8 Aug 2023 7:18 PM IST
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இரவு 7 மணிக்கு மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டிருந்தது.
சென்னை,
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இன்று காலை 9 முதல் 12 மணி வரையும், பிற்பகல் 3 முதல் 4 மணி வரையும் விசாரணை நடத்தப்பட்டது. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு நேரத் திட்டம் வகுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன்படி இன்று இரவு 7 மணிக்கு மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது செந்தில் பாலாஜி மாத்திரை எடுத்துக் கொள்வதால் இரவு விசாரணை நடத்த வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை ரத்த அழுத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் தேவைப்பட்டால் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பதற்காக 2 இ.எஸ்.ஐ. மருத்துவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.