< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் நர்சுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் - சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
|15 Jun 2024 1:00 AM IST
அரசு ஆஸ்பத்திரியில் நர்சுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வீடியோ பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை,
சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமாக நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பணி நேரத்தில் டாக்டர் ஒருவர் நர்சுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியின் இயக்குனர் ஆயிஷா கூறுகையில், பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட டாக்டரிடம் விசாகா கமிட்டி விசாரித்து வருகிறது. விசாரணை முடிந்த பின்னர் அந்த அறிக்கை மருத்துவ கல்லூரி இயக்குனருக்கும், தமிழக அரசுக்கும் அனுப்பி வைக்கப்படும் என அவர் கூறினார்.
அரசு ஆஸ்பத்திரியில் நர்சுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வீடியோ பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.