< Back
மாநில செய்திகள்
வயிற்று வலி சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட டாக்டர் கைது - திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்
மாநில செய்திகள்

வயிற்று வலி சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட டாக்டர் கைது - திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
14 Sept 2023 7:50 AM IST

திருப்பத்தூரில் வயிற்று வலி சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் போஸ்கோ நகரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவருக்கு நேற்று முன்தினம் இரவு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக அனுமந்த உபவாச நகரில் இயங்கி வரும் 24 மணி நேர ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த டாக்டர் தியாகராஜன் (35), அந்த பெண்ணிடம் அத்துமீறி நடந்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆவேசம் அடைந்த குடும்பத்தினர் மற்றும் அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள், ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஆஸ்பத்திரி மீது கற்களை வீசி தாக்கினர். மேலும் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசில் இளம்பெண் அளித்த புகாரின் பேரில், டாக்டர் தியாகராஜனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் தியாகராஜன் கொடுத்த புகாரின் பேரில், போஸ்கோ பகுதியை சேர்ந்த 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சுரேந்தர், கோகுல், நரேஷ், ராகுல் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ரஞ்சித் என்பவரை தேடி வருகின்றனர்.

ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் டாக்டர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவமும், அதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியை அடித்து நொறுக்கிய சம்பவமும் திருப்பத்தூர் பகுதியில் பரபரப்பை

மேலும் செய்திகள்