விருதுநகர்
"கடமைகளை செய்து உரிமைகளை பெறுங்கள்"-ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
|“கடமைகளை செய்து உரிமைகளை பெறுங்கள்”-ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி செயலாளர் திலீபன் ராஜா தலைமை தாங்கினார். பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் மல்லப்பராஜ் ஆண்டு அறிக்கை வாசித்தார். ஆண்டு விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சபரிநாதன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது, மாணவ-மாணவிகள் கல்வி கற்கும் போது கடமை உணர்வோடு கல்வி கற்க வேண்டும். உணர்வுகளுக்கு மதிப்பளித்து உளவியல் ரீதியாகவும் கல்வியை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும். நல்ல ஒழுக்கங்களையும், நல்ல கல்வியையும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். மாணவ-மாணவிகள் கடமையை சரியாக செய்து உங்களின் உரிமைகளை பெற வேண்டும். சமுக வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பாடுபட வேண்டும் என்றார். பின்பு மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.