< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அதிமுக வழக்குகள்... தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லை என நினைக்கிறீர்களா? - நீதிபதி கண்டனம்
|24 Aug 2022 5:05 PM IST
அதிமுக தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்க கோரிய மனுதாரர்களுக்கு சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை,
அதிமுக தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்கக் கோரி ராம்குமார் ஆதித்தன் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, வழக்கு தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், வேறு நீதிபதியை மாற்ற வேண்டுமென தலைமை நீதிபதியிடம் கடிதம் கொடுப்பதுதான் வேலையா? என்றும் தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லை என நினைக்கிறீர்களா? எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அதிமுக தொடர்பான வழக்குகளை செப்டம்பர் 9 ஆம் தேதிக்கு தன் முன் விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டார்.