< Back
மாநில செய்திகள்
டாஸ்மாக் கடைகளில் 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு மதுபானங்கள் விற்பனையா?
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகளில் 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு மதுபானங்கள் விற்பனையா?

தினத்தந்தி
|
1 Oct 2022 12:56 AM IST

டாஸ்மாக் கடைகளில் 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதியின்படி டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்கவோ, வழங்கவோ, சேவை செய்யவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை குறிப்பிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடை மற்றும் பார்களில் இவ்விதி தொடர்பாக விளம்பர பலகை வைத்திடவேண்டும். மேலும் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானம் வழங்கப்படாமல் இருப்பதை உறுதி செய்திட போலீசாருடன் இணைந்து மதுபான கடை மற்றும் பார்களில் ஆய்வு நடத்தவும் சென்னை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, ஆணையர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு மற்றும் அமலாக்கப்பிரிவு), டாஸ்மாக் மாவட்ட மேலாளர், புதுக்கோட்டை, அறந்தாங்கி கோட்ட கலால் அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்