< Back
மாநில செய்திகள்
அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் வழங்க கூடாது: ஐகோர்ட்டில் வழக்கு
மாநில செய்திகள்

அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் வழங்க கூடாது: ஐகோர்ட்டில் வழக்கு

தினத்தந்தி
|
28 Feb 2024 7:26 PM IST

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தனது மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுதாரர் கூறியுள்ளார்.

சென்னை:

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில், ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ''அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரங்கள் தொடர்பாகவும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புகார்களை அனுப்பியுள்ளேன். அந்த புகார்களில் இந்த பிரச்சினை முடியும் வரை அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது என்று கூறியிருந்தேன். ஆனால் அந்த மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. அதேநேரம், அ.தி.மு.க.வில் பல்வேறு உள்கட்சி பூசல்கள் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதால், அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று நான் அளித்துள்ள மனுவை பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்