< Back
மாநில செய்திகள்
டாக்டர்கள், நர்சுகள் சரியான நேரத்துக்கு பணிக்கு வருகிறார்களா?
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

டாக்டர்கள், நர்சுகள் சரியான நேரத்துக்கு பணிக்கு வருகிறார்களா?

தினத்தந்தி
|
26 Dec 2022 12:05 AM IST

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், நர்சுகள் சரியான நேரத்துக்கு பணிக்கு வருகிறார்களா? என கலெக்டர் ஆய்வு நடத்தினார்.

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், நர்சுகள் சரியான நேரத்துக்கு பணிக்கு வருகிறார்களா? என கலெக்டர் ஆய்வு நடத்தினார்.

கலெக்டர் ஆய்வு

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மருத்துவமனை பதிவேடுகளை பார்வையிட்டு டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்தார். உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டு சிகிச்சை பெறுபவர்களிடம் தரமான சிகிச்சை வழங்கப்படுகிறதா? என கேட்டறிந்தார்.

பின்னர் மருந்து கட்டுமிடம், மருந்து மாத்திரைகள் வழங்கும் இடம், ரத்த பரிசோதனை மையம், எக்ஸ்ரே மையம், சிடி ஸ்கேன் சென்டர், ரத்த சேமிப்பு வங்கி மற்றும் மருந்துகள் இருப்பு அறை ஆகியவற்றை பார்வையிட்டார்.

காலதாமதம் இன்றி சிகிச்சை

அப்போது அவர் பேசும் போது, அரசு ஆஸ்பத்திரியில் உள்ள நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய உபகரணங்களை பொதுமக்களின் சிகிச்சைக்காக பயன்படுத்த வேண்டும்.

வரும் நோயாளிகளிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உயர் சிகிச்சைகள் அளிக்கப்படுவதை மக்களிடம் எடுத்து சொல்லி தேவையான சிகிச்சைகளை வழங்க வேண்டும். 108 வாகன சேவையின் மூலம் விபத்துக்கள் ஏற்பட்டு வருபவர்களுக்கு தேவையான சிகிச்சை வழங்க வேண்டும். 24 மணி நேரமும் சிகிச்சைக்கு வரும் பொதுமக்களுக்கு காலதாமதமின்றி சிகிச்சை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது பரமக்குடி சப்-கலெக்டர் அப்தாப் ரசூல், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் செந்தில்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கண்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஷேக் மன்சூர், கண்காணிப்பு மருத்துவ அலுவலர் ஞானசவுந்தரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்