< Back
மாநில செய்திகள்
மேலும் 6 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மேலும் 6 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி

தினத்தந்தி
|
22 Sept 2023 12:38 AM IST

வேங்கைவயல் வழக்கில் மேலும் 6 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்காக அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக வேங்கைவயல், இறையூர் பகுதியை சேர்ந்த 25 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலும் 6 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணையில் மேலும் 6 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்