< Back
மாநில செய்திகள்
டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக்குலேசன் பள்ளியில்தேசியக்கொடி ஏற்றப்பட்டது
தூத்துக்குடி
மாநில செய்திகள்

டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக்குலேசன் பள்ளியில்தேசியக்கொடி ஏற்றப்பட்டது

தினத்தந்தி
|
17 Aug 2023 12:15 AM IST

டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது

தூத்துக்குடி டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளியில், செயலாளர் மற்றும் தாளாளர் உமரிசங்கர் வழிகாட்டுதலின் பேரில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி ஆசிரியை மஞ்சு வரவேற்று பேசினார். தெட்சணமாற நாடார் சங்க உறுப்பினர் லிங்கசெல்வன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பள்ளி கமிட்டி உறுப்பினரும், மாவட்ட பஞ்சாயத்து தலைவருமான அ.பிரம்மசக்தி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

விழாவில் ஆசிரியைகள், பெற்றோர், மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியை கிருஷ்ணா ராஜேசுவரி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் எஸ்.பி.மாரியம்மாள், துணை முதல்வர் வாசுகி ஆகியோர் செய்து இருந்தனர். ஆசிரியை இனிகோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மேலும் செய்திகள்