< Back
மாநில செய்திகள்
நாகா இன மக்களை ஆர்.எஸ்.பாரதி  இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது: கவர்னர் ஆர்.என்.ரவி
மாநில செய்திகள்

நாகா இன மக்களை ஆர்.எஸ்.பாரதி இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது: கவர்னர் ஆர்.என்.ரவி

தினத்தந்தி
|
5 Nov 2023 4:58 PM IST

நாகா இன மக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள் என்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.

சென்னை,

நாகா இன மக்கள் குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கவர்னர் மாளிகையின் 'எக்ஸ்" சமூக வலைத்தள பக்கத்தில் "நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை திமுகவின் ஆர்.எஸ்.பாரதி 'நாய் கறி உண்பவர்கள்' என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது. மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என ஆர்.எஸ். பாரதியை வலியுறுத்துகிறேன்" எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்