< Back
மாநில செய்திகள்
தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனத்துக்கு விண்ணப்பிக்கலாம்
கடலூர்
மாநில செய்திகள்

தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனத்துக்கு விண்ணப்பிக்கலாம்

தினத்தந்தி
|
22 Jun 2023 12:15 AM IST

தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனத்துக்கு விண்ணப்பிக்கலாம் அமைச்சர் சி.வெ.கணேசன் அறிவிப்பு

சிறுபாக்கம்

தி.மு.க. மேற்கு மாவட்ட செயலரும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான சி.வெ.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் அறிவிப்பின்படி கடலூர் தி.மு.க. மேற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளுக்கு இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் நியமனம் நடைபெற உள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் மாவட்ட அலுவலத்தில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து, வருகிற 30-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்புகளுக்கு விண்ணப்பிப்பவர் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பத்தில் புகைப்படத்தை ஒட்டி அத்துடன் கல்வி சான்றிதழ், வாக்காளர் மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றின் நகல்களை இணைத்து வழங்க வேண்டும். ஏற்கனவே பொறுப்பில் உள்ளவர்கள் மீண்டும் பொறுப்புக்கு வர விரும்பினால் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்