< Back
மாநில செய்திகள்
வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம்
திருப்பூர்
மாநில செய்திகள்

வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம்

தினத்தந்தி
|
24 Sep 2023 10:39 AM GMT

வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் அமைச்சர்கள் கொடியேற்றி தொடங்கி வைத்தனர்

திருப்பூர்

தி.மு.க. மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக்கூட்டம் திருப்பூரை அடுத்த படியூரில் நடைபெற்றது. அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் கொடியேற்றி தொடங்கி வைத்தனர்.

பயிற்சி பாசறைக்கூட்டம்

மேற்கு மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறைக்கூட்டம் திருப்பூரை அடுத்த காங்கயம் படியூரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்தியம், ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, கரூர், கோவை மாநகர், கோவை வடக்கு, கோவை தெற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, நீலகிரி ஆகிய 14 கழக மாவட்டத்தை சேர்ந்த வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

7 வருவாய் மாவட்டத்தை சேர்ந்த 50 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 14 ஆயிரத்து 411 பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பயிற்சி பாசறை கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியாக கொடியேற்று விழா நடைபெற்றது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தி.மு.க. கொடி ஏற்றி தொடங்கி வைத்தார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவரான இல.பத்மநாபன், வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு. நாகராஜன், வடக்கு மாநகர செயலாளரும், மேயருமான தினேஷ்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தி.மு.க. அரசின் சமூக நலத்திட்டங்கள்

காலை பயிற்சி பாசறைக்கூட்டம் தொடங்கியது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் குறித்து வக்கீல் அணி செயலாளர் எஸ்.ஆர்.இளங்கோ எம்.பி. பேசினார். பின்னர் செயலி மற்றும் கணக்கெடுப்பு பணிகள் குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.எஸ்.ராஜேஷ்குமார் எம்.பி. பேசினார். திராவிட மாடல் தி.மு.க. அரசின் சமூக நல திட்டங்கள் குறித்து தமிழ்நாடு மாநில வளர்ச்சி குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் பேசினார். தொடர்ந்து சமூக வலைதளங்கள் பயன்பாடும், செயல்படுத்த வேண்டிய முறைகள் குறித்து மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் தரணீதரன் பேசினார்.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு திராவிட மாடல் தி.மு.க. அரசின் சமூக நல திட்டங்கள் குறித்து தி.மு.க. கொள்கை பரப்புக்குழு செயலாளர் திருச்சி சிவா எம்.பி. பேசினார்.



Related Tags :
மேலும் செய்திகள்