< Back
மாநில செய்திகள்
தி.மு.க. - வி.சி.க. இடையே இன்று  2-ம் கட்ட பேச்சுவார்த்தை
மாநில செய்திகள்

தி.மு.க. - வி.சி.க. இடையே இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை

தினத்தந்தி
|
2 March 2024 7:04 AM IST

நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க - விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இடையே இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தி உள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியையும் தி.மு.க. ஒதுக்கியுள்ளது. அதனைத்தொடர்ந்து மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தி.மு.க. கூட்டணியில் தற்போது வரை 4 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நடந்து முடிந்து, 6 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க - விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இடையே இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. பேச்சுவார்த்தைக்கு வருமாறு தி.மு.க. அழைப்பு விடுத்துள்ளது. அப்போது முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..

மேலும் செய்திகள்