< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல் அருகே தி.மு.க. ஒன்றிய பொருளாளர் வெட்டிக்கொலை
மாநில செய்திகள்

திண்டுக்கல் அருகே தி.மு.க. ஒன்றிய பொருளாளர் வெட்டிக்கொலை

தினத்தந்தி
|
27 Sept 2024 1:08 AM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் தி.மு.க. தெற்கு ஒன்றிய பொருளாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் தி.மு.க. தெற்கு ஒன்றிய பொருளாளர் மாசி என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

மர்ம நபர்களால் மாசி வெட்டிக்கொல்லப்பட்டதை கண்டித்து, உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை கைவிடக்கூறியதால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சம்பவ இடத்தில் ஏ.டி.எஸ்.பி. மகேஷ் ஆய்வு நடத்தினார். மேலும் ஏராளமான போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்