< Back
மாநில செய்திகள்
பா.ஜ.க.வின் ஜனாதிபதி வேட்பாளருக்கு தி.மு.க. ஆதரவு அளிக்குமா? டி.கே.எஸ். இளங்கோவன் பதில்
மாநில செய்திகள்

பா.ஜ.க.வின் ஜனாதிபதி வேட்பாளருக்கு தி.மு.க. ஆதரவு அளிக்குமா? டி.கே.எஸ். இளங்கோவன் பதில்

தினத்தந்தி
|
12 Jun 2022 4:22 AM IST

பல்லக்கு விவகாரம் போன்ற ஆன்மிக பிரச்சினை, பள்ளி கல்வித்துறை உள்பட முக்கிய பிரச்சினைகளில் தி.மு.க. அரசு தடுமாறுகிறதா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், 'அரசு எடுக்கும் முடிவுகள் மக்கள் மீதோ மாணவர்கள் மீதோ திணிக்கப்படக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருப்பதாகவும், மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறு முடிவை மாற்றிக்கொள்வதில் தவறு இல்லை' என்றும் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குறித்து பேசுகையில், 'அவர் இன்னமும் அதிகாரி போல்தான் நடந்து கொள்வதாகவும். அவருக்கு அரசியல் புரிதல் இல்லை' என்றும் கூறியுள்ளார்.

பா.ஜ.க.வின் ஜனாதிபதி வேட்பாளருக்கு தி.மு.க. ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கு, பதில் அளித்து பேசுகையில், 'கூட்டணி கட்சிகள் எடுக்கும் முடிவைத்தான் தி.மு.க. பின்பற்றும். பா.ஜ.க. பட்டியலினத்தை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவரை ஆதரிக்க வாய்ப்பு இல்லை' என்றும் உறுதியாக கூறியுள்ளார். மேலும் உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்கப்படுமா? கவர்னர் விவகாரத்தில் அடக்கி வாசிப்பது ஏன்? உள்பட சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்தும் நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விகளுக்கு பொறுமையாகவும், விளக்கமாகவும் டி.கே.எஸ். இளங்கோவன் பதில் அளித்துள்ளார்.

மேலும் செய்திகள்