தி.மு.க என்றைக்கும் ஆசிரியர்களின் கட்சி - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
|தி.மு.க. என்றைக்கும் ஆசிரியர்களின் கட்சி என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் காமராஜர் சாலை உள்ள தனியார் மண்டபத்தில் திருச்செந்தூர் வட்டார தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா நடந்தது.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
மேலும் நல்லாசிரியர் விருது பெற்ற கீழநாலுமூலைகிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணிக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
பின்னர், விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. எப்பொழுதுமே ஆசிரியர்களை நேசிக்கின்ற இயக்கமாக இருக்கின்றது. தி.மு.க. என்றைக்கும் ஆசிரியர்களின் கட்சி ஆகும். ஏனென்றால் திமுக கொள்கைகள் அனைத்தையும் தெரிந்து அதற்கு ஆதரவாக இருப்பவர்கள் ஆசிரியர்கள்.
இன்று பல்வேறு வகையிலான பொருளாதார நெருக்கடி இருந்தாலும் எந்த வகையிலாவது ஆசிரியர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை முதல்வர் கண்டிப்பாக செய்து தருவார் என்ற உறுதியை தருகிறேன். தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தான் ஒவ்வொரு மாணவர்களையும் சரியான வழியில் கொண்டு வந்து அவர்களுக்கு உயர்வை ஏற்படுத்தி வருவார்கள். உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.