அரியலூர்
தி.மு.க. சாதனை விளக்க தெருமுனை பிரசாரம்
|தி.மு.க. சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், சோழன்மாதேவி, வேம்பு குடி ஊராட்சியை சேர்ந்த வடவார்தலைப்பு ஆகிய ஊர்களில், தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் தமிழக அரசின் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி என்னும் தலைப்பில் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ந.கார்த்திகைகுமரன் வரவேற்று பேசினார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தலைமை தாங்கினார். தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசின் சாதனைகளை விளக்கி பேசினார். பொதுக்குழு உறுப்பினர் ஷாஜஹான், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ராமதுரை, ஒன்றிய அவைத்தலைவர் சூசைராஜ், பொருளாளர் நாகராஜன், ஒன்றிய துணை செயலாளர்கள் சாமிதுரை, இந்துமதி நடராஜன், ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் தனசீலன் நன்றி தெரிவித்து பேசினார்.