< Back
மாநில செய்திகள்
தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் பிறந்த நாள் விழா
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் பிறந்த நாள் விழா

தினத்தந்தி
|
22 Oct 2022 5:20 PM GMT

தி.மு.க. சுற்றுச்சூழல் அணி துணை செயலாளரும், ஜி.கே.உலகப்பள்ளி இயக்குனருமான வினோத் காந்தியின் 47-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.


தி.மு.க. சுற்றுச்சூழல் அணி துணை செயலாளரும், ஜி.கே.உலகப்பள்ளி இயக்குனருமான வினோத் காந்தியின் 47-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

மாவட்ட தி.மு.க. சுற்றுச்சூழல் மற்றும் தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் அணி சார்பில் நடந்த விழாவிற்கு, வியட்நாம் அயலக அணி அமைப்பாளர் வேதா சீனிவாசன் தலைமை தாங்கினார்.

விழாவில் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்திக்கு, நிர்வாகிகள், பிறந்தநாள் கேக் வெட்டி, பூங்கொத்து கொடுத்து சால்வை மற்றும் மாலைகள் அணிவித்து, வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் எஸ்.எல்.டி.சிவா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தொன்போஸ்கோ மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள், தி.மு.க. மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அனைவருக்கும் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்