< Back
மாநில செய்திகள்
கச்சத்தீவு பற்றிய பொய் பிரசாரத்தை தி.மு.க. நிறுத்த வேண்டும்: நிர்மலா சீதாராமன் கருத்து

கோப்புப்படம்

மாநில செய்திகள்

கச்சத்தீவு பற்றிய பொய் பிரசாரத்தை தி.மு.க. நிறுத்த வேண்டும்: நிர்மலா சீதாராமன் கருத்து

தினத்தந்தி
|
1 April 2024 3:33 AM IST

கருணாநிதி முதல்- அமைச்சராக இருந்தபோதுதான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கச்சத்தீவு ஒப்படைப்பு விவகாரம் குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், பல ஆண்டுகளுக்கு முன்பு சட்டசபையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசிய வீடியோவையும் இணைத்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது:-

கச்சத்தீவு விவகாரத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி முதல்- அமைச்சராக இருந்தபோதுதான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதாகவும், எனவே, கச்சத்தீவு பற்றி கேள்வி எழுப்ப தி.மு.க.வுக்கு உரிமை இல்லை என்றும் ஜெயலலிதா கூறினார். எனவே, கச்சத்தீவு பிரச்சினை குறித்து பொய் பிரசாரம் செய்வதை தி.மு.க. நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்