< Back
மாநில செய்திகள்
தி.மு.க. சார்பில் நீட் தேர்விற்கு எதிராக கையெழுத்து இயக்கம்
கரூர்
மாநில செய்திகள்

தி.மு.க. சார்பில் நீட் தேர்விற்கு எதிராக கையெழுத்து இயக்கம்

தினத்தந்தி
|
22 Oct 2023 12:25 AM IST

தி.மு.க. சார்பில் நீட் தேர்விற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

கரூரில் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் தலைமை கழக பேச்சாளர் மதிமாறன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். எம்.எல்.ஏ.க்கள் இளங்கோ (அரவக்குறிச்சி), மாணிக்கம் (குளித்தலை), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாநகர செயலாளர்கள் எஸ்.பி.கனகராஜ், சுப்பிரமணியன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சரவணமூர்த்தி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சக்திவேல் உள்பட தி.மு.க. கட்சி நிர்வாகிகள், மாவட்ட இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு நீட் தேர்விற்கு எதிராக கையெழுத்திட்டனர்.

மேலும் செய்திகள்