< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுக: வாக்குச்சாவடி முகவர்களுடன் 12-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை...!
|10 Nov 2022 3:27 PM IST
திமுகவின் வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
சென்னை,
நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும் என கடந்த மாதம் 9-ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். மேலும், 2 மாதத்திற்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணியை முடிப்பதற்கு மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் திமுகவின் வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலியில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். வரும் 12-ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் ஆலோசனையில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி முகவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்ய மாவட்ட செயலாளர்களுக்கு திமுக தலைமை அறிவுறுத்தி உள்ளது.