திருநெல்வேலி
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
|நாங்குநேரியில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இட்டமொழி:
தி.மு.க. நெல்லை கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் கழக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி நாங்குநேரியில் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பாகமுகவர்கள் கூட்டம் நடைபெற்றது. நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு வரவேற்றார். நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல், மாவட்ட பொருளாளர் ஜார்ஜ்கோசல், மாநில விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபீந்தர், ஒன்றிய கவுன்சிலர் நல்லாசிரியர் அகஸ்டின் கீதராஜ் மற்றும் பாகமுகவர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மூலைக்கரைப்பட்டியில் நடந்த பாகமுகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் கலந்து கொண்டு பேசினார். இதில் தி.மு.க. நகர செயலாளர் எஸ்.எஸ்.கே.முருகையா, பேரூராட்சி தலைவர் பார்வதி மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.