< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்த சாமியார் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க.வினர் மனு
|8 Sept 2023 12:54 AM IST
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்த சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டிடம் தி.மு.க.வினர் மனு அளித்தனர்.
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லாவை மாவட்ட தி.மு.க. அமைப்பாளர் செல்வம் மற்றும் வக்கீல்கள் நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா என்பவர் உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவருக்கு ரூ.10 கோடி சன்மானம் அளிப்பதாக பேசியது ஊடகங்களில் வெளிவந்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இவரது செயல் நாட்டின் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கெடுக்கும் விதமாக உள்ளது. எனவே அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.