< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'மத்திய அரசின் நிகழ்ச்சிகளில் தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பதில்லை' - எல்.முருகன் குற்றச்சாட்டு
|16 Nov 2023 8:06 AM IST
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுக்கு மத்திய அரசின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் எண்ணமில்லை என எல்.முருகன் கூறியுள்ளார்.
கோவை,
மத்திய அரசின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தி.மு.க. அமைச்சர்கள் பங்கேற்பதில்லை என மத்திய இணை மந்திரி எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"மத்திய அரசின் நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொள்வது மரபாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுக்கு மத்திய அரசின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் எண்ணமில்லை. இது குறித்து தமிழக அரசின் முதன்மை செயலாளரிடம் முறையிட்டுள்ளோம். ஆனால் இதுவரை எந்த அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டதாக தெரியவில்லை" என்று கூறினார்.