< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"கடவுளை மற; மனிதனை நினை" தி.மு.க. எம்.பி., ஆ.ராசா பதிவு வைரல்
|6 Jun 2024 11:29 AM IST
'கடவுள் குழந்தையின் கைகளில் பிச்சை பாத்திரம்" என்ற தலைப்பில் நீலகிரி தி.மு.க. எம்.பி.,ஆ.ராசா போட்ட டுவீட் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு 2014ல் முழு மெஜாரிட்டி பெற்றது. 2019ல் அசுர பலத்துடன் ஆட்சியை பிடித்தது. ஆனால் 2024 தேர்தலில் முழு மெஜாரிட்டி பெறவில்லை. கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகளான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளை அரவணைத்துத்தான் ஆட்சி அமைக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்தநிலையில், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி முழு மெஜாரிட்டி பெறாதது குறித்து 'கடவுள் குழந்தையின் கைகளில் பிச்சை பாத்திரம்" என்ற தலைப்பில் நீலகிரி தி.மு.க. எம்.பி. ஆ.ராசா போட்ட டுவீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆ.ராசா எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
கடவுள் குழந்தையின்
கைகளில் பிச்சை பாத்திரம் !
அட்சயப்பாத்திரத்தோடு
ஆந்திராவும் பீகாரும் ;
கடவுளை மற
மனிதனை நினை !
பெரியார் வாழ்கிறார் !! என பதிவிட்டுள்ளார்.