< Back
மாநில செய்திகள்
விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த திமுக எம்.பி. ஆ.ராசா
மாநில செய்திகள்

விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த திமுக எம்.பி. ஆ.ராசா

தினத்தந்தி
|
16 Aug 2023 1:25 PM IST

கோவை கணியூர் சுங்கச்சாவடியில் விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு தனது காரில் திமுக எம்.பி. ஆ.ராசா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

கோவை,

நீலகிரி மக்களவை தொகுதி திமுக எம்பியும், திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா, கோவை, திருப்பூர் பகுதிகளில் பல்வேறு கட்சி நிகழ்வுகளில் கலந்து கொண்டு, இறுதியாக அவிநாசியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தை முடித்து விட்டு இன்று காலை கோவை விமான நிலையம் சென்று கொண்டு இருந்தார்.

இந்தநிலையில், அவிநாசி – கோவை தேசிய நெடுஞ்சாலையில், கணியூர் சுங்கசாவடி அருகே ஆ.ராசா வாகனம் சென்று கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி சாலையில் மயக்க நிலையில் இருந்ததை பார்த்தார்.

உடனடியாக தனது காரை விட்டு கீழே இறங்கி அந்த இளைஞரை தனது உதவியாளர்களுடன் மீட்டு அவரை தனது காரிலேயே தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தன்னுடன் வந்த டாக்டர் கோகுலையும் அவர்களுடன் அனுப்பி வைத்தார் ஆ.ராசா. அதன் பிறகு அந்த இளைஞர் உடல் நிலை குறித்து போனில் கேட்டறிந்தார் திமுக எம்பி ஆ.ராசா. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்