< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மார்ச் 21-ம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் - அரசு தலைமை கொறடா கோவி செழியன் அறிவிப்பு
|13 March 2023 9:21 PM IST
மார்ச் 21-ம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அரசு தலைமை கொறடா கோவி செழியன் அறிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வருகிற 21-ம் தேதி மாலை 5 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அரசு தலைமை கொறடா கோவி செழியன் அறிவித்துள்ளார்.
மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 22-ம் தேதி காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.