< Back
மாநில செய்திகள்
பா.ஜனதாவில் இணைந்த தே.மு.தி.க.வினர்
சிவகங்கை
மாநில செய்திகள்

பா.ஜனதாவில் இணைந்த தே.மு.தி.க.வினர்

தினத்தந்தி
|
1 Jun 2022 1:05 AM IST

தே.மு.க.வினர் தங்களை பா.ஜனதா கட்சியில் இணைத்துக்கொண்டனர்.

எஸ்.புதூர்

எஸ்.புதூர் அருகே கட்டுகுடிபட்டியில் பா.ஜனதா கட்சி சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி தலைமை தாங்கினார். இதில் எஸ்.புதூர் ஒன்றிய தே.மு.தி.க. அவைத்தலைவர் இளையராஜா தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தே.மு.க.வினர் தங்களை பா.ஜனதா கட்சியில் இணைத்துக்கொண்டனர். இந்த நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர்கள் நாகராஜன், கன்னையா உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பா.ஜனதா ஒன்றிய தலைவர் தேவேந்திரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்