< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
|23 Oct 2023 12:15 AM IST
குடவாசலில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது.
குடவாசல் ஒன்றிய பேரூர் தி.மு.க. தேர்தல் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் குடவாசலில் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் தலைமை தாங்கி பேசினார். குடவாசல் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோதிராமன், கொரடாச்சேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சேகர் என்கிற கலியபெருமாள், பொதுக்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக குடவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், வாக்குச் சாவடி முகவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் கழக செயலாளர் சேரன் நன்றி கூறினார்.