மயிலாடுதுறை
தி.மு.க., வாக்குச்சாவடி முகவர் கூட்டம்
|சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. வாக்குச்சாவடி முகவர் கூட்டம் நடந்தது. இதில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
திருவெண்காடு:
சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் திருவாளி, காத்திருப்பு, மங்கைமடம் ஆகிய பகுதிகளில் தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. திருவாளியில் நடந்த கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான பஞ்சுகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் நெடுஞ்செழியன், கணேசன், ரவிச்சந்திரன், சுதாகர், உதய ராணி உத்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் மண்ணை சோழராஜன், பொதுக்குழு உறுப்பினர் கென்னடி ஆகியோர் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வது குறித்து விளக்கி கூறினார்கள். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்து மகேந்திரன், ரவி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை தலைவர் ஜீவராஜ், தமிழ் தென்றல், இளங்கோவன், இளவரசன், அகோரமூர்த்தி உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.