< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
|14 Oct 2023 2:39 AM IST
ராதாபுரத்தில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது.
ராதாபுரம்:
ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் ராதாபுரம் பஸ்நிலையம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஒன்றிய அவைத்தலைவர் ராமையா தலைமை தாங்கினார். ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி அனைவரையும் வரவேற்றார். ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளருமான சுரேஷ் மனோகரன் பேசினார். கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி சமூகை முரளி, இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுப்பையா, சவுந்தரபாண்டியபுரம் பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.