< Back
மாநில செய்திகள்
தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. போட்டியிடும் தொகுதி அறிவிப்பு
மாநில செய்திகள்

தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. போட்டியிடும் தொகுதி அறிவிப்பு

தினத்தந்தி
|
18 March 2024 1:22 PM IST

தி.மு.க. கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சென்னை,

தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து ம.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது . தி.மு.க. கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

திருச்சி தொகுதி கடந்த முறை காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, தி.மு.க. கூட்டணியில் தமிழகத்தில் 9 தொகுதிகள், புதுச்சேரி மக்களவை தொகுதி உள்பட 10 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

மேலும் செய்திகள்