< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
சுங்கச்சாவடியில் தே.மு.தி.க.வினர் முற்றுகை
|10 Sept 2023 12:56 AM IST
சுங்கச்சாவடியில் தே.மு.தி.க.வினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
மங்களமேடு
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடியில் பல அச்சு கொண்ட கனரக வாகனங்களுக்கு கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவா அய்யப்பன் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு, சுங்கச்சாவடி முன்பு திரண்டு சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.