< Back
மாநில செய்திகள்
தி.மு.க. கவுன்சிலரின் மகள் கடத்தல்
சேலம்
மாநில செய்திகள்

தி.மு.க. கவுன்சிலரின் மகள் கடத்தல்

தினத்தந்தி
|
13 Feb 2023 1:00 AM IST

சேலத்தில் தி.மு.க. கவுன்சிலரின் மகள் கடத்தப்பட்டது தொடர்பாக வாலிபர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கவுன்சிலர் மகள்

சேலம் தாதகாப்பட்டி பங்களா தோட்டம் பராசக்தி நகரை சேர்ந்தவர் கோபால். தி.மு.க.வை சேர்ந்த இவர், மாநகராட்சி 58-வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இவரது மகள் கனிஷ்கா. இவருக்கும், மணிகண்டன் என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9-ந் தேதி திருச்சி உறையூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணம் நடந்தது.

இந்தநிலையில், கடந்த 7-ந் தேதி தாதகாப்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து கனிஷ்கா தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை சிலர் காரில் கடத்தி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

வழக்கு

கனிஷ்காவை சீலநாயக்கன்பட்டி காஞ்சிநகரை சேர்ந்த அஜித்குமார் (வயது 25), இவரது தந்தை மாது என்கிற மாதேஷ் (52), தாய் தேவி (48) ஆகிய 3 பேரும் சேர்ந்து கடத்தி சென்றுவிட்டதாகவும், இதனால் அவரை கண்டு பிடித்து தரக்கோரியும் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் செய்தார்.

அதன்பேரில், கவுன்சிலரின் மகளை கடத்தியதாக அஜித்குமார் மற்றும் அவரது பெற்றோர் மீது நேற்று அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்