< Back
மாநில செய்திகள்
தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக 29-ம் தேதி ஈரோட்டில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக 29-ம் தேதி ஈரோட்டில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்

தினத்தந்தி
|
24 March 2024 3:55 PM IST

தி.மு.க. கூட்டணியை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மேற்கொள்ள இருக்கும் தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம் வெளியாகி உள்ளது.

சென்னை,

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தி.மு.க கூட்டணியில் இணைந்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்களவை தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. எனினும், ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மேற்கொள்ள இருக்கும் தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஈரோட்டில் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

அதைத் தொடர்ந்து, 30-ந்தேதி (சனிக்கிழமை) சேலத்திலும், ஏப்ரல் 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) திருச்சியிலும், 3-ந்தேதி (புதன்கிழமை) சிதம்பரத்திலும், 6-ந்தேதி (சனிக்கிழமை) ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையிலும், 10-ந்தேதி (புதன்கிழமை) மதுரையிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

11-ந்தேதி (வியாழக்கிழமை) தூத்துக்குடியிலும், 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பூரிலும், 15-ந்தேதி (திங்கள்கிழமை) கோயம்புத்தூரிலும், 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பொள்ளாச்சியிலும் அவர் பிரசாரம் செய்கிறார்.




மேலும் செய்திகள்