< Back
மாநில செய்திகள்
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு திமுக தான் காரணம் - சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு
மாநில செய்திகள்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு திமுக தான் காரணம் - சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
10 Aug 2022 4:07 PM IST

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு திமுக தான் காரணம் என சசிகலா கூறினார்.

சென்னை,

அதிமுகவில் மிகப்பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது ஓபிஎஸ் ஒரு பிரிவாகவும், ஈபிஎஸ் ஒரு பிரிவாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுகவின் முதல் எம்.பி.யான மாய தேவர் காலமானார். அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். வி.கே.சசிகலாவும் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:- திமுக தனிப்பட்ட நபருக்கான கட்சி அல்ல. பொறுத்திருந்து பாருங்கள். அனைவரையும் ஒன்றிணைப்பேன். அதிமுகவை கைப்பற்றுவதுடன் இரட்டை இலை சின்னத்தையும் மீட்பேன் என்றார்.

தொடர்ந்து சசிகலாவிடம், பாஜகவின் அழுத்தம் தான் அதிமுகவின் பிளவிற்கு காரணமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், 40 வருடமாக அதிமுகவில் இருந்துள்ளேன். எல்லா அரசியல் சூழல்நிலைகளையும் பார்த்துள்ளேன்; இதன் பின்னணியில் திமுக இருப்பதாக கருதுகிறேன். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு திமுக தான் காரணம். திமுக தான் பின்னால் இருந்து செயல்படுகிறது. அதிமுகவின் பிளவுக்கு மத்திய அரசு காரண இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்