< Back
மாநில செய்திகள்
மக்கள் நலனில் அக்கறை இல்லாத கட்சி தி.மு.க.
மதுரை
மாநில செய்திகள்

மக்கள் நலனில் அக்கறை இல்லாத கட்சி தி.மு.க.

தினத்தந்தி
|
11 Nov 2022 2:02 AM IST

மக்கள் நலனில் அக்கறை இல்லாத கட்சி தி.மு.க. என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. குற்றம்சாட்டி உள்ளார்.

மக்கள் நலனில் அக்கறை இல்லாத கட்சி தி.மு.க. என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. குற்றம்சாட்டி உள்ளார்.

பள்ளி மேஜைகள்

திருப்பரங்குன்றம் கூடல்மலை தெருவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ரூ.3 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்ட பணி, அவனியாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.10 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ள மேஜை நாற்காலி மற்றும் நவீன வகுப்பறையை, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நேற்று திறந்து வைத்தார்.

அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக பள்ளிகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு தேவையான டேபிள், நாற்காலி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன வகுப்பறைகள், பள்ளிக்கூட கட்டிடங்கள் போன்றவைக்கு நிதி வழங்கப்படுகிறது. மேலும் தொகுதி மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அவர்களின் தேவைகள் அறிந்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு, பல்வேறு சமூக திட்டங்களை நிறுத்தி வருகிறது. அதே போல் மக்கள் நலத்திட்டங்களுக்கும் போதிய நிதியை ஒதுக்குவதில்லை. இது குறித்து சட்டசபையில் பேசியும் பலன் இல்லாமல் உள்ளது. அதே போல் எதிர்க்கட்சி தொகுதிகளில் எந்த நலத்திட்டப்பணிகளை அரசு செயல்படுத்துவதில்லை. ஆனால் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே சீராக மக்கள் நலப்பணிகளை முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வந்தார்.

சிப்காட்

திருப்பரங்குன்றம் தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய 10 கோரிக்கைகளை கலெக்டர் மூலம் அரசிடம் மனுவாக வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பரங்குன்றத்தில் அரசு கலைக் கல்லூரி வேண்டும், வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும், நிலையூரில் அரசு கைத்தறி கூடம் வேண்டும், நாகமலைபுதுக்கோட்டையில் சிப்காட் வேண்டும், வடபழஞ்சியில் பிரதான கால்வாய் இணைக்க வேண்டும், தென்கால் கண்மாயில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கி சுற்றுலா தலம் அமைக்க வேண்டும், திருநகரில் ஆக்கி மைதானம் உள்பட 10 கோரிக்கைகளை தெரிவித்துள்ளேன். ஆனால் இந்த கோரிக்கையின் நிலை என்ன என்று தெரியவில்லை. வரபோகிற தேர்தல்களில் தி.மு.க. தோல்வி அடையும். மீண்டும் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று நிறுத்தப்பட்ட மக்கள் திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்