< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலையை திமுக அரசு திடீரென உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்
|4 Nov 2022 1:49 PM IST
ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலையை திமுக அரசு திடீரென உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை,
ஆவின் ஆரஞ்சு பால் விலையை தி.மு.க அரசு திடீரென உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
ஆவின் ஆரஞ்சு பால் விலையை தி.மு.க அரசு திடீரென உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 சேர்த்து கொடுப்பதாகக் கூறிவிட்டு, விற்பனை விலையில் லிட்டருக்கு ரூ.12 அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.
மற்ற ஆவின் பால் வகைகளின் விலையையும் அடுத்தடுத்து உயர்த்த மக்கள் விரோத தி.மு.க அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உயர்த்தப்பட்ட ஆரஞ்சு பால் விலையைக் குறைப்பதுடன், மற்ற பால் விலையையும் உயர்த்தக்கூடாது என தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.