< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திமுக அரசு எந்த ஒரு வளர்ச்சி பணியையும் மேற்கொள்ளவில்லை - செல்லூர் ராஜு பேட்டி
|2 July 2024 6:56 PM IST
திமுக ஆட்சியை போதைப்பொருள் ஆட்சி எனக் கூறலாம் என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்
சென்னை,
மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது,
மூன்று ஆண்டுகளாகியும் திமுக அரசு எந்த ஒரு வளர்ச்சி பணியையும் மேற்கொள்ளவில்லை. தமிழக அரசிடம் பேசி மதுரைக்கான திட்டங்களை நிறைவேற்ற அமைச்சர்கள் முன் வரவில்லை.அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறவில்லை. இப்போது கள்ளச் சாராய மரணங்கள் குறித்து சட்டப் பேரவையில் விவாதிக்க அனுமதி தரவில்லை.கள்ளச் சாராய மரணங்கள் குறித்து சட்டப்பேரவையில் விதி எண் 56-ன் படி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. ஆனால், விதி எண் 56-ன் படி மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசி உள்ளார்.சட்டமும் விதிமுறைகளும் அனைவருக்கும் சமம் தானே? திமுக ஆட்சியை போதைப்பொருள் ஆட்சி எனக் கூறலாம். என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்,