அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளை திமுக அரசு செய்கிறது: ஜெயக்குமார் பேட்டி
|அம்மா உணவகங்களை திமுக அரசு நீர்த்து போக செய்துள்ளது என்று ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை,
அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
புதுமையாக திட்டங்களை யோசிக்க, தெரியாமல் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றி கொள்கிறார்கள். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு திமுக ஆட்சியில் மூடுவிழா நடக்கிறது. அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளை மட்டுமே திமுக அரசு செய்கிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது; அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. திமுக ஆட்சியில் விலைவாசி, வரி உயர்வு, மின் கட்டணம் உயர்ந்துள்ளது. அம்மா உணவகங்களை திமுக அரசு நீர்த்து போக செய்துள்ளது.
அம்மா சிமெண்ட்டை வலிமை சிமெண்ட் என மாற்றினார்கள். அம்மா மருந்தகங்களை மூடி விட்டு முதல்வர் மருந்தகங்களை தொடங்குகின்றனர். தமிழகம் முழுவதும் விரைவில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.