இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு திட்டங்களை கொண்டுவந்தது திமுக அரசு" - இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் பேச்சு
|சென்னையில் திமுக சார்பில் நடைபெறும் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
சென்னை,
சென்னை, நீலாங்கரையில் புனித ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் அமைச்சர் பேசியதாவது; இஸ்லாமிய மக்களுக்கு எனது ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மத வேறுபாடு இல்லாமல் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அடக்கம், இரக்கம், உதவுதல், அன்பு, திராவிட முன்னேற்ற கழகம் எப்பொழுது ஆட்சியில் வந்ததோ அப்போது இஸ்லாமிய சமுதாயத்திற்காக பல்வேறு திட்டங்கள், சாதனைகள் உருவாக்கி தரப்பட்டுள்ளன. இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு திட்டங்களை கொண்டுவந்தது திமுக அரசு.
முதல் முறை ஆட்சிக்கு வந்தவுடன் மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர். அதன் பிறகு வந்த அதிமுக ஆட்சி அதனை ரத்துசெய்தது. மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் மிலாதுநபிக்கு அரசு விடுமுறை கொண்டுவரப்பட்டது.
கோரிக்கை வைக்காமலேயே சிறுபான்மையினருக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது திமுக அரசு. கோரிக்கை வைக்காமலே செய்யும் அரசு, கோரிக்கை வைத்தால் செய்யாமல் இருக்குமா?"
அனைத்தையும் உள்ளடக்கிய அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. இன்றைய தினம் திராவிட கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவி வருவதை பார்க்கிறோம்.
நமது நாட்டை காப்பாற்றும் ஆற்றல் சமூக நீதி, சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய 3 கருத்தியலுக்கும் தான் உள்ளது. சமூக நீதி சக்திகளின் ஒற்றுமை தேர்தலுக்காக மட்டுமல்ல. இந்தியாவின் எதிர்காலத்துக்கும் ஏற்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.