இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் திமுக அரசு தோல்வி அடைந்து விட்டது - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சனம்
|மக்கள் கோபத்தை ரூ.6 ஆயிரம் கொடுத்து அமைதிப்படுத்திட முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
சென்னையில் தேங்கியிருக்கும் மழை நீரால் மிகப்பெரிய நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இறந்து கிடக்கும் பிராணிகளால் பெரிய அளவிலான தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது சுகாதாரத்துறை சுணக்கத்தில் உள்ளது.புயல் பாதிப்புக்கு முன்பும் பின்பும் தமிழ்நாடு அரசிடம் ஒருங்கிணைப்பு இல்லை. அரசு இயந்திரம் முடங்கிப்போயுள்ளது. மக்கள் கோபத்தை ரூ.6 ஆயிரம் கொடுத்து அமைதிப்படுத்திட முடியாது. இயற்கை பேரிடர் என்பது ஒன்று தான்; இயற்கை பேரிடரை எதிர் கொள்ள திறன் வேண்டும்.
மக்களுக்கு நம்பிக்கை என்பது அரசாங்கம் தான்; ஆனால் இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் திமுக அரசு தோல்வி அடைந்து விட்டது. தற்போதைய சூழலில் கூட சுகாதாரத்துறை தாமதமாக இயங்குகிறது. சென்னை நகரில் பிளிச்சிங் பவுடர் கூட போடவில்லை. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தான் கேள்வி கேட்க முடியும், இதில் எதிர்க்கட்சிகளை குறை சொல்லி பயனில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.