< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
கருணாநிதி சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு
|3 Jun 2023 11:25 PM IST
கருணாநிதி சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவிக்கப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான மறைந்த கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் இன்று ஆகும். இந்த நிலையில் ஒடிசாவில் 3 ரெயில்கள் மோதி விபத்தில் ஏராளமானோர் பலியான சம்பவத்தால் தி.மு.க. நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. கருணாநிதியின் 100-வது பிறந்தநாளையொட்டி புதுக்கோட்டையில் தி.மு.க. கட்சி அலுவலகமான பெரியண்ணன் மாளிகையில் அவரது சிலைக்கு வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது முத்துராஜா எம்.எல்.ஏ., நகர செயலாளர் செந்தில் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தி.மு.க.வின் மற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.