< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
காமராஜர் சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு
|16 July 2023 12:15 AM IST
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளையொட்டி, தூத்துக்குடி காமராஜர் மார்க்கெட் அருகில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. இளைஞர் அணி சார்பில், தி.மு.க. இளைஞரணி மாநில துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு.க. இளைஞரணி, வர்த்தக அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, தொண்டரணி, உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் உள்பட பல்வேறு அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக புதுக்கோட்டையில் இருந்து எஸ்.ஜோயல் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் இருசக்கர வாகனங்களில் அணிவகுத்து வந்தனர். இவர்களுக்கு காய்கறி மார்க்கெட் அருகே தி.மு.க. இளைஞரணியினர் பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர்.