< Back
மாநில செய்திகள்
தி.மு.க. கொடியேற்று விழா
தென்காசி
மாநில செய்திகள்

தி.மு.க. கொடியேற்று விழா

தினத்தந்தி
|
24 Jun 2023 12:15 AM IST

செங்கோட்டையில் தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது

செங்கோட்டை:

செங்கோட்டை மேலூர் முத்தழகி அம்மன் கோவில் தெருவில் நகர தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகரின் முக்கிய பகுதிகளில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. நகரச்செயலாளா் வழக்கறிஞா் ஆ.வெங்கடேசன் தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவா் ராமலட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எம்.ரஹீம், ஒன்றிய செயலாளர் ஆ.ரவிசங்கர், கலைஞர் தமிழ்ச்சங்க செயலாளர் வழக்கறிஞர் மு.ஆபத்துக்காத்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளா் வழக்கறிஞா் பெ.சிவபத்மநாதன் கட்சி கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். முன்னதாக கழகப் பேச்சாளர்கள் நெல்லை ரவி, செங்கை குற்றாலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினா். பின்னா் 8, 10-வது வார்டு பகுதிகளில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காதர் அண்ணாவி, மாவட்ட மகளிர் அணி தலைவர் பேபி ரஜப் பாத்திமா மற்றும் பலர் கலந்துகொண்டனர். வார்டு செயலாளா் ஆ.சண்முகராஜா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்