< Back
மாநில செய்திகள்
கோவையில் வீடு புகுந்து தி.மு.க. பெண் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு!!!
மாநில செய்திகள்

கோவையில் வீடு புகுந்து தி.மு.க. பெண் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு!!!

தினத்தந்தி
|
12 Aug 2023 12:21 PM IST

கோவையில் வீடு புகுந்து தி.மு.க. கவுன்சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

கோவை,

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அவ்வை நகரை சேர்ந்தவர் சித்ரா (44). தி.மு.க.வை சேர்ந்த இவர் 3வது வார்டு கவுன்சிலராக உள்ளார். நேற்று இரவு வீட்டில் இருந்தபோது திடீரென அவரது வீட்டிற்குள் புகுந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், சித்ரா அவரது கணவர் ரவிக்குமார் (47), மகன் மோகன் (24) ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது 3 பேரும் ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்