< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
|26 Nov 2023 11:06 AM IST
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை:
திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்று வரும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர் பாலு, இளைஞரணி செயலாளர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் திமுக இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், உறுப்பினர்களின் பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் பணிகள் தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.